Sunday, 01 August 2010
Home arrow புலம்பல்

News

 
புலம்பல்


தொ(ல்)லைகாட்சிப்பெட்டி Print E-mail
http://www.tamilwin.net/newsimages/tholaikkadsippeddi8.jpgபணக்காரர்களிடம் மட்டும்
இருந்தது அன்று.
ஏழைகளிடம் குடிசையிலும்
இருக்கின்றது இன்று
நடுத்தர குடும்பத்திலோ
சொந்தமாக வாங்கியது ஒன்று
அரசாங்கம் தந்து ஒன்று
பிரித்துக் கொண்டனர்.
பெரியவர்கள் பார்க்க ஒன்று
சிறியவர்கள் பார்க்க ஒன்று
வக்கிரம் வளர்க்கும் தொடருக்கு
அடிமையானது ஒரு கூட்டம்.
பாலுணர்வை ஊட்டும் பாடலுக்கு
அடிமையானது ஒரு கூட்டம்.
கேலி பேசும் நகைச்சுவைக்கு
அடிமையானது ஒரு கூட்டம்..
வன்முறை போதிக்கும் திரைப்படத்திற்கு
அடிமையானது ஒரு கூட்டம்.
அடிமைகள் பலவிதம்.
சிந்திக்க, செயல்பட, படிக்க, எழுத
மறந்து சோம்பேறிகள் பெருகினர்.
பரிசுப்போட்டி அறிவித்து விட்டார்கள்.
பாவம் இனி தமிழன்
இமைக்க மறந்து
தொடர்கள் பார்ப்பான்
 
எதனால் இந்த நடுக்கம் ....? Print E-mail


இயலாமை !
வயோதிகத்தால் எனது உடல் நடுங்குகிறது

இருள் இன்னும் விலகாத
மார்கழி மாத அதிகாலை..
ஆற்றில் மூழ்கி தலைதுவட்டாது
அப்படியே நடந்து வருகிறேன்

தாங்கமுடியாமல்
குளிரால் எனது உடல் நடுங்குகிறது

தாங்கித்தான் ஆகவேண்டும்

காஷ்மீரக மலையில் எனது
கால்கள் நடந்தே ஆகவேண்டும்

வாழ் நாள்க் கனவு அதை
வீழுமுன் நடத்திக் காட்டவேண்டும்

தென்கரையிலிருந்து வடகோடிக்குத்
தவழ்ந்தேயானாலும் போய்ச் சேருவேன்

மலைமீது காலடி வைத்தபின்புதான்
மேலுலகம் போய்ச் சேருவேன்

பயிற்சியும் அதற்கான முயற்சியும்
எடுத்தேதான் ஆகவேண்டும்

முடியுமா ?
கவலையால் எனது உடல் நடுங்குகிறது


‘ எண்பது தாண்டியும்
.ஏன் இப்படி அலையுது ? ’
‘ கட்டைல போற கெழவிக்கு
.காஷ்மீரு போறஆசையப் பாரு’
’அதுக்குத்தான்யா ஆண்டவன்
.அளந்தே வச்சிருக்கான்’

கேலியும்,கிண்டலும் !
சுடுசொல்கேட்டு எனது உடல் நடுங்குகிறது

கடைசிவரையில்ப் போராடி
பார்க்கவேண்டியவரை பார்த்து
விழவேண்டிய காழில் விழுந்து
ஒருவழியாய் சாதித்துவிட்டேன்

இதோ ...........
மலையேறிக் கொண்டிருக்கிறேன்
எங்கு நோக்கினும் வெண்பனி
என்னைச் சுற்றிலும் வீரர்கள்

பாதுகாப்பாய் இருந்தாலும்
கடும்பனியால் எனது உடல் நடுங்குகிறது

காலடி எடுத்து வைக்கிறேன்
கார்க்கிலின் கடும் பாறையில்

நின்று நிதானித்து
இழுத்து உள்வாங்குகிறேன் மூச்சை..

இதில் எப்படியும் கலந்திருக்கும்
இங்கே உலாவிக் கொண்டிருக்கும்
எனது மகனின் இறுதிமூச்சும்........

இப்பொழுதும் எனது உடல் நடுங்குகிறது

ஆனால் இது எதனால்...????
எனக்குத் தெரியவில்லை .........
 
"மகளிர் மட்டும்" Print E-mail

 மகளிர் பள்ளி
மகளிர் கல்லூரி
மகளிர் மட்டும் பஸ்
மகளிர் விடுதி
என்றெல்லாம் பெண்களைத்
தனிமைப்படுத்தி,
தயார்ப்படுத்தி,
மணமுடித்து வைக்க -

ஆணைப் புரியாமல்
பெண்ணும்,
பெண்ணை பிரமிப்பாகப்
பார்க்கும் ஆணும்,
எதிர்பார்ப்புகள் வெவ்வேறாய்,
சிக்கலுடன்
தொடங்கும் வாழ்க்கை!

பெண்களை
இயல்பாய் பார்க்க ஆணும்,
ஆண்களுடன்
நட்புடன் பழக பெண்ணும்,
வாய்ப்பற்று இருப்பது
சிக்கல்களின் தொடக்கம்.

விலங்குகளும், பறவைகளும்
பால்பேதம் பார்ப்பதில்லை!
குழந்தைகளாக வளர்க்காமல்,
ஆண், பெண் என்று
ஆரம்பம் முதல் வளர்த்ததாலே,
உறவுச் சிக்கல்கள்;
பணியிடத்தில் குழப்பங்கள்.

பணியில் தொடங்கி,
பாராளுமன்றம் வரை
வந்துவிட்டபின்
பள்ளி, கல்லூரியில் மட்டுமல்ல,
காவல் நிலையத்திலும்
தேவையில்லை,
மகளிர் மட்டும்.

 
தமிழ் பித்தன் Print E-mail
கவிதை போட்டியில்
கலந்து கொண்டேன் - நான்
எனக்கு கொடுத்த - தலைப்போ
ஹைக்கூ கவிதை - மூன்று
வரிகளுக்கு குறையாமல் - எழுத
வேண்டும் என்பது - தலைப்பின்
நிபந்தனை மூன்றே - மூன்று
எழுத்துக்கள் எழுதி - முதல்
பரிசை தட்டி - சென்றேன் நான்
ஆம் நான் எழுதியது - என் உன் உயிரின்
பெயரை - தமிழ்
 
காதலிப்பாயா? .... Print E-mail
 மனம்
என் மனம்
எனக்குச் சொன்னது
உன்னில் உன்னைவிட அவள் அன்பு வைத்திருக்கிறாள் என்று
எண்ணிப் பார்த்தேன், புரியவில்லை
அதுதான் உன்னிடத்திலேயே கேட்டுவிட்டேன் – என்
காதல் கேள்வியை
 
<< Start < Prev 1 2 Next > End >>

Results 1 - 9 of 16