|
 ஏ கடலே உன் கரையில் இதுவரையில் கிளிஞ்சல்கள்தானே சேகரித்தோம் முதன் முதலாய்ப் பிணங்கள் பொறுக்குகிறோம்
ஏ கடலே நீ முத்துக்களின் பள்ளத்தாக்கா முதுமக்கள் தாழியா உன் அலை எத்தனை விதவைகளின் வெள்ளைச் சேலை?
உன் மீன்களை நங்கள் கூறுகட்டியதற்காக எங்கள் பிணங்களை நீ கூறுகட்டுகிறாய்?
அடக்கம் செய்ய ஆளிராதென்றா புதை மணலுக்குள் புதைத்துவிட்டே போய்விட்டாய்? பிணங்களை அடையாளம் காட்டப் பெற்றவளைத் தேடினோம் அவள் பிணத்தையே காணோம் |
|
Read more...
|
|
|


காதலித்துப் பார்!
உன்னைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றும்... உலகம் அர்த்தப்படும்... ராத்திரியின் நீளம் விளங்கும்....
உனக்கும் கவிதை வரும்... கையெழுத்து அழகாகும்..... தபால்காரன் தெய்வமாவான்...
உன் பிம்பம் விழுந்தே கண்ணாடி உடையும்... கண்ணிரண்டும் ஒளிகொள்ளும்...
காதலித்துப்பார் !
|
|
Read more...
|
|
 அவளின் ஞாபகங்களே அவனுக்கு சுவாசம் பன்னிரண்டு பாலைவன வருஷங்களுக்குப் பிறகு அவளை அவன் பார்க்க நேருகிறது. எங்கெனில்.. ஒரு ரயில் நிலையத்தில். எப்போதெனில்.. ஒரு நள்ளிரவில். எதிரெதிர் திசையில் செல்லும் ரயில்கள் இளைப்பாறிக் கொள்ளும் அந்த இடைவெளியில்.. ரயில்களின் எதிரெதிர் பெட்டிகளில் பழைய கண்கள் நான்கு பார்த்துக் கொள்கின்றன. அப்பொழுது- மனசில் எத்தனை மௌன பூகம்பம்!) உன்னைப் பார்த்த ஒரு நிமிஷத்தில் இமைகளைக் காணாமல் போட்டு விட்டன கண்கள். |
|
Read more...
|
|
|