|
தமிழ் இலக்கியத்தின் மணிமகுடம் திருக்குறள் தனிப் பெரும் இடம் பெற்ற இலக்கியம் திருக்குறள் தமிழ் என்ற சொல்லே இடம்பெறாத திருக்குறள் தமிழன் என்ற சொல்லே இடம்பெறாத திருக்குறள் கடவுள் என்ற சொல்லே இடம்பெறாத திருக்குறள் கற்க்கண்டை மிஞ்சும் கனிச்சுவைமிக்க திருக்குறள் வாழ்வியல் நெறியை பயிற்றுவிக்கும் திருக்குறள் வாழ்வின் அர்த்தம் உணர்த்தும் திருக்குறள் உலக இலக்கியங்களின் உன்னதம் திருக்குறள் உலகிற்கு அறநெறி அறிவிக்கும் திருக்குறள் உலக மொழிகள் யாவிலும் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் உலக மக்கள் யாவரும் அறிந்த திருக்குறள் அழியாப் பெருமையுடன் நிலைத்திருக்கும் திருக்குறள் அறியாமை நீக்கிடும் அறிவுடைமை திருக்குறள் மனிதநேயம் மனதில் விதைக்கும் திருக்குறள் மடமை நீக்கி பகுத்தறிவை போதிக்கும் திருக்குறள் ஈடு இணையற்ற இனிய இலக்கியம் திருக்குறள் எண்ணிலடங்கா கருத்துப் புதையல் திருக்குறள் சொக்க வைக்கும் சொற்களின் சுரங்கம் திருக்குறள் சோகத்தை மறக்க வைக்கும் சுகம் திருக்குறள் தமிழுக்கு செம்மொழி பெற்றுத் தந்த திருக்குறள் தமிழருக்கு பெருமை ஈட்டித் தந்த திருக்குறள் காந்தியடிகளின் குரு டால்ஸ்டாய் டால்ஸ்டாயின் குரு திருவள்ளுவர் |
|
இன்று தைப்பொங்கல். எல்லோரும் ஓடி தொலைகாட்சி முன் அமர்ந்துக் கொண்டோம்; நான் எட்டி சாமியை பார்த்தேன் சாமியால் எங்களையோ தொலைகாட்சியையோ சபித்துவிட முடிய வில்லை ; 'பொங்கலோ பொங்கல்' தொலைகாட்சி நிகழ்ச்சியில் கத்துகிறார்கள்; சாமி வெளியே வந்து எட்டிப் பார்கிறார் காஸ் ஸ்டவ்வில்லிருந்து பொங்கல் வெந்துவிட்டதென குக்கர் சத்தம் போட்டது; சாமி கரும்பை தேடினார் கரும்பு தோலுரிக்கப் பட்டு துண்டு துண்டாக வெட்டி பாலித்தின் பையில் போட்டு சூப்பர் மார்க்கட்டில் விற்றதை வாங்கி வந்து பிரிட்ஜில் வைத்ததாக நான் சாமியிடம் சொல்லவே இல்லை; சாமி வராண்டாவிற்கு வந்து எங்கே மாடு.. வயக்காடு.. எதையுமே காணோமே என்றார் என்னால் சாமியை - சபித்துவிட முடியவில்லை சாமி இன்னும் - அந்த காலத்துலயே இருக்கு! |
|
ஒரு கால சுவடின் கண்களிலிருந்து பிறக்கிறது நம் வாழ்வின் மீதான கோபம்; கொட்டி அழுதிடாமல் மனதில் கத்தியழும் வாழ்விற்கே - உனக்கும் எனக்கும் போட்டி; ஊருலகம் பேசுமோ உறவு பேசுமோ வேலை இருக்குமோ போகுமோ பணம் கிடைக்குமா கிடைக்காதா நாளை இருப்பேனா மாட்டேனா.........??? கேள்விகளோடு மட்டுமே கனத்து போய் நகர்த்தும் வாழ்வில் - ஞானம் பிறக்கும் முன் பிறப்பின் காரணம் புரியும் முன் திருத்திக் கொண்டு வாழ நினைப்பதற்குள் உயிர் பிரிகிறதே தோழா????????? வாழ்வொன்றும் அத்தனை பெரிதில்லை வாழும் போதே திருத்திக் கொள்ளல் தகுமோ!! |
|
|
 அரபிக்கடல் போல அழகாய்த்தானிருக்கிறாய்..! வங்கக் கடல் போல வனப்பாய்த்தான் இருக்கிறாய்..! இந்தியப் பெருங்கடல் போல இன்பமாய்த்தான் இருக்கிறாய்..! உன்னுடன் பயணிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு… காதல் என்னும் படகைத்தான் காணோம்..? |
|
|

அவளை முதன் முதலில் பார்த்த அந்த நாள் மகிழ்ச்சி வாழ்க்கையில் என்றும் இனிமையான நிகழ்ச்சி உனக்கும் எனக்கும் வேறுபட்ட மொழியிலும் கூட நீ முதன் முதலில் பேசிய அந்த தமிழ் வார்த்தை மிகவும் பிடித்தது.. |
|
|
|
<< Start < Prev 1 2 3 Next > End >>
|
| Results 1 - 9 of 22 |