|
சனத்திரளின் மத்தியிலே ஏற்றிவைத்த ஒளிபோலேஉனைஎந்தன் புத்தியிலே உறைக்கவைத்து சித்திரமாய்வரைந்தது முழுநிலவாய் என்வாழ்வின் அனைத்துநாள்இரவெல்லாம் பகலாக்க எனக்காக உனைப்படைத்து.குதிரையின் வால்போல பின்முட்டிவரை உன்கூந்தல்.பயிரிட்டு வளர்த்ததுபோல் அதில்மல்லிகைப் பூப்பந்தல்.அதைப்பார்த்து எனக்குன்மேல் விதவிதமாய் ஒருஉந்தல்இதயமெல்லாம் ஆகிப்போச்சு ஒருநொடியில் பலகந்தல்.அம்புபூட்டிய வில்லைப்போல வளைந்தநிற்கும் புருவங்கள்.மீன்தரையில் துடிப்பதுபோல அடித்துக்கொள்ளும் கண்கள்.அதைஒளித்து ஒளித்துஎம்மை தேடவைக்கும் இமைகள்.இமையுள்ளே ஒளிந்துநின்று எட்டிப்பார்க்கும் மணிகள்.பிடித்துவைத்த பிள்ளையார்போல அதனிடத்தில் மூக்குஅதற்கழகின் அழகுசேர்க்க வைரத்திலொரு ஊக்குகடித்துவிடத் தோன்றுமவள் கொவ்வைப்பழ உதடுகடைந்தெடுத்த வைரம்போல ஜொலிக்குமவள் பற்கள்.பாய்ந்துசெல்லும் ஆறுபோல அவள்தலையில் நேருச்சிவந்துசேரும் கடல்போல பரந்திருந்த பெருநெற்றி.நெற்றிக்கண் இருப்பிடத்தில் சின்னதாக ஒருபொட்டுஒற்றைமணித் தோடுபோட்டு வளைந்திருந்த இருகாது.பஞ்சுமிட்டாய் கலரினிலே அவளுடைய கன்னம்பஞ்சுபஞ்சாய் ஆக்கிவிடும் எம்மையது திண்ணம்.கொஞ்சுஅவளை என்றுசொல்லி எம்மனது உனனும்.மிஞ்சிவிட்டால் அவள்கையால் எம்கன்னம் மின்னும்பிரம்மனவன் படைத்துவிட்டான் அழகின் சிகரத்தில்எண்ணத்திலும் அவளைவைத்தான் வானத்தின் உயரத்தில்அச்சம்மடம் நாணத்துடன் அவளிருந்தாள் பயிர்ப்பில்காரிருளில் உள்ளஒரு ஒளிவிளக்கின் வடிவில்வஞ்சியவளை எனக்காகப் படைத்துவிட்ட முருகாபஞ்சியின்றி தூதுசென்று என்சுகம்சொல் இறைவாநெஞ்சினிலே கவலையின்றி காத்திருக்கச்சொல் அவளைவஞ்சமின்றி உணவுண்டு மகிழ்ந்திருக்கச்சொல் தலைவா.மன்னித்திடு இறைவா தூதுசெல்லச் சொன்னதற்குகன்னியவள் எனைநினைத்து தூக்கமின்றி இருப்பவளைபுண்ணியவான் நீதானே படைத்தவரைக் காக்கவேண்டும்.அந்நியனாய் நில்லாது சேர்ந்துநின்று காத்திடுவாய்.எம்மைநீ பிரித்துவைத்து வேடிக்கை பார்க்காமல்வாழ்க்கையை கரிக்கவைத்து வாடிக்கை ஆக்காமல்சேர்த்துவிடு இருவரையும் சிறப்பிடத்தில் ஒன்றாகபார்த்து விடு எங்களையும் பக்குவமாய் சேயாக. |
|
|

சிரித்து விளையாடிய அந்த சிறிய மனசு அசைக்க முடியாதென இறுகியிருந்த இளைய மனசு உன்னிடம் தான் தோற்றது முதன் முதலாய் அரும்பிய வயதிலேயே ஆட்டம் கண்டது உன்னால் தான்
பள்ளிக் காதலா இல்லை பருவக் காதலா தெரியவில்லை எனக்கு ஆனால் ஒன்று மட்டும் உறுதி வென்றுவிட்டாய் நீ
அப்போதெல்லாம் நான் தினமும் உன்னைத் தேடினேன் கணமும் உன்னையே நாடினேன், நினைவில் தினமும் நீயானாய் கனவில் வாழ்ந்தேன் உன்னுடன் நிஜத்திலோ நீ தொலைவானாய்
நீ எனக்கு மட்டும் என்று உரிமை கொண்டாடிய சந்தோஷம் நீ என்னில் அக்கறை காட்டிய போது என்னவன் என்ற மகிழ்ச்சி
நடந்தவை எல்லாம் நேற்றுப் போல இன்றோ நான் ஒரு தொலைவில் நீ ஒரு தொலைவில்
இறுதியாக ஒரு வேண்டுதல் இறைவனிடம் மட்டும் மறு உலகிலாவது நானும் நீயும் ஒன்றாக வேண்டும் பழைய நண்பர்கள் கூட்டத்துடன் புதிய நண்பர்கள் முன்னிலையில் சந்தோஷமாக நித்தியம் வாழ வேண்டும் |
|
பெண்பார்த்து திரும்புகையில் மண்பார்த்து நின்றபோதும் பொயிட்டு வருகிறோம் என்றுசொல்ல சட்டென கண்பார்த்து சிறுதலையாட்டி உறவறியாமல் சம்மதம்தெரிவித்து உள்ளம் நுழைந்தாள் அப்போதே... இடம்விட்டு இடம்நகர்ந்து இல்லத்தில் தீபமேற்றி தானும் உணவு உண்டு தண்ணீரையும் சுத்தம்செய்யும் மீனாய் அன்புடனும் அறமுடனும் இனக்கமுடன் இல்லறம் நடாத்தி இருகுழந்தை ஈன்றேடுத்து இயங்கும் என்ன்வளே எனக்கு முதல்குழந்தை. |
|
உயிர் அறுக்கும்வார்த்தைகளால் பேசினாள் !! காயங்களால் மட்டுமே என்னை தீண்டினாள் !! என் இதயத்தை பறித்து அவள் கூந்தலில் சூடினாள் !! சுட்டெரிக்கும் வார்த்தைகளால் என் ரத்தத்தை எரித்தாள் !! எப்போதும் சிரிக்காதவள் என் மரணத்தின்போது கண்டிப்பாக சிரிப்பாள் !!!! |
|
|

அமாவாசை நாளில் தேடினேன்... நிலவை காணவில்லை.. காரணம் ........... தவம் செய்ய சென்றிருக்கும் உன்னை போன்ற அழகு பெற |
|
|
|
<< Start < Prev 1 2 3 4 5 Next > End >>
|
| Results 1 - 9 of 40 |